
வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்ததன் காரணமாக இத்தொடரானது ஹைபிரிட் மாடலில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயாய ஐசிசி தொடரின் போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்ற அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 2027ஆம் ஆண்டுவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இந்த நடைமுறையானது அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் முதல் நடைமுறை படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் பொதுவான இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தை பிசிபி தேர்வு செய்துள்ளது.
CHAMPIONS TROPHY SCHEDULE IS HERE!#ChampionsTrophy2025 #INDvPAK pic.twitter.com/DBWwldw3dl
— CRICKETNMORE (@cricketnmore) December 24, 2024