கராச்சி மைதானத்தில் இந்திய கொடி ஏற்றபடாதது ஏன்? - பிசிபி விளக்கம்!
கராச்சியில் உள்ள தேசியா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவின் கொடி ஏற்றப்படாததற்கான விளக்கத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்துள்ளது.

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது இன்னும் இரு தினங்களில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. முன்னதாக பாகிஸ்தானில் மட்டும் இத்தொடர் நடைபெற இருந்தது.
ஆனால் அதன்பின் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததை அடுத்து இத்தொடரானது ஹைபிரிட் மாடலில் நடப்படும் என்று ஐசிசி அறிவித்தது. அதன்படி இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு ஐசிசி தொடர்களின் போதும் நடத்தப்படும் கேப்டன்ஸ் மீட் அப் நிகழ்ச்சியையும் இம்முறை ஐசிசி ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Trending
இந்நிலையில் இன்று கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இருந்து ஒரு காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை கிழப்பியுள்ளது. வரவிருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 இல் பங்கேற்கும் நாடுகளின் கொடிகள் கராச்சி மைதானத்தில் ஏற்றப்பட்டன. இந்நிலையில், அந்த மைதானத்தில் ஏற்றப்பட்ட கொடிகளில் இந்தியாவின் மூவர்ணக் கொடியானது இடம்பெறவில்லை. இது தற்போது விவாதமாக வெடித்துள்ளது.
மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தங்கள் நாட்டில் விளையாட மறுத்ததற்காக இந்தியா மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தனது கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்காளை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது விளக்கமளித்துள்ளது.
No Indian flag displayed among the participating nations' flags at the stadium in Pakistan!#ChampionsTrophy #India #Cricket #INDvPAK pic.twitter.com/F5YgaetxnV
— CRICKETNMORE (@cricketnmore) February 17, 2025இதுகுறித்து பேசிய பிசிபி அதிகாரி ஒருவர், “சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் போட்டி நடைபெறும் நாள்களில் நான்கு கொடிகள் மட்டுமே ஏற்றப்படும் என்று ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. அதில் ஐசிசி, தொடரை நடத்தும் பகைஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும், அந்த நாளில் போட்டியிடும் அணிகளின் கொடிகள் மட்டுமே இடம்பெறும். இதன் காரணமாக கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடும் அணிகளின் கொடிகள் மட்டுமே அங்கு ஏற்றப்பட்டுள்ளன.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் வந்து விளையாட மறுத்துவிட்டது. இதனால் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் மட்டுமே நடைபெறவுள்ளன. அதேசமயம் அந்த கராச்சியில் உள்ள தேசிய மைதானம், ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் மற்றும் லாகூரில் உள்ள கடாஃபி மைதானங்களில் விளையாடும் அணிகளின் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது” என்று தங்கள் விளக்கத்தை கொடுத்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now