
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற இருந்த 7ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. மேலும் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் தங்களுடைய முதல் போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ள இருந்தன. அதேசமயம் இப்போட்டியில் வெற்றிபெறும் அணியின் அரையிறுதி வாய்ப்பும் பிரகாசமாக இருந்தது.
ஆனால் இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை நீடித்த கரணத்தால் போட்டியின் டாஸ் நிகழ்வு தாமதமானது. அதன்பின் தொடர் மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டு இப்போட்டி நடைபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தது. ஆனால் இடைவிடாத மழை காரணமாக ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இப்போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.