
Chance For Virat Kohli To End ICC Title Drought: Parthiv Patel (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் விராட் கோலி தலைமையின் கீழ் இந்திய அணி இதுவரை எந்தவிதமான ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை. அதனால் இத்தொடரில் விராட் கோலி நிச்சயம் கோப்பையை கைப்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்நிலையில், விராட் கோலி ஐசிசி கோப்பையைக் கைப்பற்ற இதுவே சரியான தருணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.