
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்காக சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, உள்ளிட்ட 12 மைதானங்கள் போட்டியை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்னும் நாலு மாதங்களில் இத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் பிசிசிஐ 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு திட்டம் போட்டுள்ளது.
அதற்கு முன் பாகிஸ்தான் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் எங்கு நடத்துவது என ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது சென்னை தான் பாகிஸ்தான் அணி வீரர்களின் பாதுகாப்புக்கு ஏற்ற இடம் என முடிவு செய்து பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கிய லீக் ஆட்டம் சென்னையில் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. மேலும் நாக் அவுட் சுற்றும் டெல்லியில் நடைபெறுகிறது. இதே போன்று இந்தியாவில் உள்ள பல கிரிக்கெட் மைதானங்கள் உள்கட்ட அமைப்பு வசதிகள் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டு இருந்தது. குறிப்பாக டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம் கிரிக்கெட் போட்டி நடத்த தகுதியே இல்லாத மைதானம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.