
chennai-super-kings-gave-royal-challenger-bangalore-a-big-target-of-192-runs (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 19ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. இதையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ஃபாப் டூ பிளெசிஸ் இணை களமிறங்கியது.
தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை பவர் பிளேவில் 51 ரன்களைச் சேர்த்தது. பின்னர் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கெய்க்வாட் ஆட்டமிழந்து வெளியேறினார்.