
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக உள்ள ரவீந்திர ஜடேஜா அந்த அணியின் பலம் என்ன என்பது குறித்து பேசியுள்ளார். ஜடேஜா சிஎஸ்கே அணியில் தற்போது 11 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் ஜடேஜாவுக்கும் சென்னை அணி நிர்வாகத்திற்கும் விரிசல் ஏற்பட்டதாக நம்பப்பட்டது. எனினும் ஜடேஜா மீண்டும் சிஎஸ்கே அணிக்காக
விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜடேஜா, சிஎஸ்கே அணியை ஏன் தமக்கு பிடிக்கும் என்பதை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “சி எஸ் கே நிர்வாகமும் சரி உரிமையாளர் சீனிவாசனும் சரி அணியில் சரியாக செயல்படாத வீரர்கள் மீது எந்த அழுத்தத்தையும் போட மாட்டார்கள். 11 ஆண்டுகள் கழித்த பிறகும் சரி முதல் ஆண்டு பார்த்து கொண்ட மாதிரி தான் வீரர்களை இப்போதும் பார்த்துக் கொள்வார்கள். நாம் சரியாக விளையாடாத போது நமது மனம் நோகும்படி அவர்கள் நடந்து கொள்ள மாட்டார்கள்.
சிஎஸ்கே அணியில் எந்த பாகுபாடும் கிடையாது.சீனியர்கள், ஜூனியர்கள் என அனைவரும் ஒரே மாதிரி தான் நடத்தப்படுவார்கள். சீனியர்களுக்கு எந்த மாதிரி மரியாதை வழங்கப்படுகிறதோ அதே மாதிரி மரியாதை தான் அண்டர் 19 கிரிக்கெட் வீரர்களுக்கும் வழங்கப்படும். சிஎஸ்கே அணியில் யாருக்கும் எந்த நெருக்கடியும் இதுவரை ஏற்படுத்தியது கிடையாது.