
ஜூன் மாதம் கிரிக்கெட் வீரர்களின் திருமண மாதம் என்று சொல்லும் அளவுக்கு தற்போது வரை மூன்று இளம் வீரர்கள் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். ஜூன் மாதம் 3ஆம் தேதி சிஎஸ்கே அணியின் ஸ்டார் பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட் திருமணம் நடைபெற்றது. அவரது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
தனது காதலியும், மகளிர் கிரிக்கெட் வீராங்கனையுமான உத்கர்ஷா பவார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ருதுராஜ் கெய்க்வாட். தமிழ்நாடு பாரம்பரிய ஆடையான வேஷ்டி சட்டை அணிந்து ருதுராஜின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்த அவர் சென்னை மக்களுக்காக அர்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.
இவரை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, நீண்ட நாள் காதலியான ரச்சனா கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜூன் 8ஆம் தேதி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.