
Chennai Super Kings suffer another injury blow as Moeen Ali hurts his ankle (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முதல் 5 போட்டிகளில் தொடர் தோல்விகளை தழுவிய நடப்பு சாம்பியன் சிஎஸ்கே, அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற்று வெற்றிப்பயணத்தை தொடங்கியுள்ளது.
ரவீந்திர ஜடேஜாவின் தலைமையில் வெற்றிப்பயணத்தை தொடர்ந்து பிளே ஆஃபிற்கு முன்னேறும் முனைப்பில் உள்ள சிஎஸ்கே அணி இன்று பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது. இந்நிலையில், சிஎஸ்கே அணிக்கு விரும்பத்தகாத செய்தி கிடைத்துள்ளது.
சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி கணுக்கால் காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.