டிஎன்பிஎல் 2021: மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 ரன்கல் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஜெகதீசன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார்.
Trending
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜெகதீசன் 90 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு அமித் சத்விக் - சந்தோஷ் ஷிவ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தன.
பின் 16 ரன்களில் சந்தோஷ் ஷிவ் 16 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சத்விக்கும் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
இருப்பினும் 7ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சர்வண் குமார் அதிரடியாக விளையாடி இறுதிவரை போராடினார். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 177 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now