
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப்பெற்றது. இந்நிலையில் தற்போது, இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டிக்கான டாஸை வென்ற வங்கேதச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில், மமினுல் ஹக் 84 (157) மட்டுமே சிறப்பாக விளையாடினார். மற்றவர்களில் ஷான்டோ 24 (57), லிடன் தாஸ் 25 (26), முஷ்பிகுர் ரஹீம் 26 (46) ஆகியோரை தவிர யாரும் 20+ ரன்களை கூட தொடாததால், வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227/10 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
உமேஷ் யாதவ் 4/25, அஸ்வின் 4/71 ஆகியோர் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்கள். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் கேஎல் ராகுல் 10 (45), ஷுப்மன் கில் 20 (39) இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் தைஜுல் இஸ்லாமிடம் வீழ்ந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து 24 ரன்கள் எடுத்திருந்த புஜாராவும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.