ரஞ்சி கோப்பை: காயத்துடனும் அணியை கரைசேர்த்த புஜாரா; இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
சர்வீசஸ் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடி 91 ரன்களை குவித்து சௌராஷ்டிரா அணியின் நட்சத்திர வீரர் புஜாராவின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் முக்கிய தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரி நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற எலைட் குரூப் ஏ அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் சர்வீசஸ் ம்ற்றும் சௌராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற சர்வீசஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய சர்வீசஸ் அணி முதல் இன்னிக்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 536 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரோஹிலா 153 ரன்களையும், எல் எஸ் குமார் 161 ரன்களையும், அர்ஜுன் சர்மா 101 ரன்களையும் சேர்த்திருந்தனர். சௌராஷ்டிரா அணி தரப்பில் அதிகபட்சமாக டிஏ ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், பார்த் பட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Trending
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய சௌராஷ்டிரா அணி போட்டியின் முடிவில் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 462 ரன்களைச் சேர்த்திருந்தது. இதில் அதிகபட்சமாக சட்டேஷ்வர் புஜாரா 91 ரன்களையும், விஷ்வராஜ் ஜடேஜா 88 ரன்களையும், அர்பித் வசவாதா 71 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் சர்வீசஸ் - சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான இப்போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சட்டேஷ்வர் புஜாரா தனது முதுகுபகுதியில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் 91 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். ஏற்கெனவே நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா அடுத்தடுது சதங்களை விளாசிய நிலையில், இப்போட்டியிலும் 91 ரன்களைச் சேர்த்துள்ளது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
முன்னதாக இந்திய அணியிலிருந்து மோசமான ஃபார்ம் காரணமாக கழட்டிவிடப்பட்ட புஜாரா, அதன்பின் கவுண்டி கிரிக்கெட் மற்றும் ரஞ்சி கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கம்பேக்கிற்காக காத்துள்ளது. ஆனால் தற்போது அவரை அணியில் சேர்க்கமால் ஓரங்கட்டும் பிசிசிஐ, விராட் கோலி, ஜடேஜா, கேஎல் ராகுல் போன்று நட்சத்திர வீரர்களும் இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய நிலையில் அவர்களுக்கு பதிலாக அனுபவமில்லாத வீரர்களுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now