
ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் உலகத் தரத்திலான வீரர்கள் இருந்தபோதிலும் அந்த அணியால் அரையிறுதிக்கு மேல் முன்னேற முடிந்ததில்லை. அதனால், அந்த அணிக்கு உலகக் கோப்பையை வெல்ல அதிர்ஷ்டமில்லாத அணி என்ற பெயரும் உண்டானது.
இந்த நிலையில், உலகக் கோப்பையை வெல்லும் வரை தென்னாப்பிரிக்க அணியின் மீதான உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிர்ஷ்டமிடல்லாத அணி என்ற பார்வை மாறாது என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து பேசிய பவுமா, “உலகக் கோப்பையை வெல்ல தென்னாப்பிரிக்கா அதிர்ஷ்டமில்லாத அணி என ஓரிரு முறை நான் கூறியிருக்கிறேன். ஆனால், அணியிலிருந்து அதுபோன்று யாரும் கூறியதைக் கேட்டதில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு உலகக் கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டம் இல்லை என்பதை அணியில் சிலர் நம்புவதாகவும், சிலர் நம்பாததாகவும் நான் நினைக்கிறேன்.