
chris-gayle-becomes-the-first-ever-batsman-to-complete-14000-runs-in-t20-career (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில். டி20 கிரிக்கெட் என்றாலே பலருக்கு நினவில் இருப்பது இவரது இமாலய சிக்சர்களும், சின்ன சின்ன சேட்டைகளும் தான்.
தற்போது 42 வயதை எட்டவுள்ள கெயில் இன்னும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். விளையாடுவதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து தனது சாதனை பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியிலும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து 67 ரன்களைக் குவித்து அசத்தினார்.