
Cricket Image for கரோனா தடுப்பூசி: பிரதமருக்கு நன்றி தெரிவித்த கெய்ல்! (Chris Gayle (Image Source: Google))
கரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு உள்ளன. அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி கரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதேசமயம் கரோனா தடுப்பூசிகள் மற்ற நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகள், தேவையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜமைக்கா நாட்டுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கியதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.