ஐபிஎல் 2023: கிறிஸ் ஜோர்டனை ஒப்பந்தம் செய்தது மும்பை இந்தியன்ஸ்!
இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டனை மும்பை இந்தியன்ஸ் அண் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ் ஜோர்டன், ஐபிஎல் போட்டிகளில் முதல் முறையாக 2016ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். பின் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக எடுக்கப்பட்டவர், சிஎஸ்கே அணிக்கு விளையாடும் முன்பு இரண்டு சீசன்கள் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடினார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். பின்னர் ரிலீஸ் செய்யப்பட்டார். இந்த ஐபிஎல் ஏலத்தில் எவரும் அவரை எடுக்க முன்வரவில்லை. இந்த சீசன் மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சில் சற்று திணறி வருகிறது. முன்னணி வேகப்பந்து பேச்சாளர்கள் பும்ரா காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். ஜோஃப்ரா ஆர்ச்சரும் காயத்தினால் விளையாட முடியாமல் இருக்கிறார். ஏழு போட்டிகளில் இரண்டு போட்டிகள் மட்டுமே விளையாடினார்.
Trending
ஏற்கனவே எடுக்கப்பட்ட ஜெய் ரிச்சர்ட்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரைலீ மெரிடித் மும்பை அணிக்கு எடுக்கப்பட்டார். இப்போது மும்பை அணிக்கு ஒரு வேகப்பந்துவீச்சாளர் கட்டாயம் தேவைப்படுகிறது. யாரை எடுப்பார்கள் என்கிற பேச்சுக்கள் தொடர்ந்து அடிபட்டு வந்தன. கடந்த மாதம் இங்கிலாந்தை சேர்ந்த வேகபந்துவீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டன் மாற்று வீரராக எடுக்கப்படுவார் என்ற பேச்சுக்கள் அடிபட்டன.
அப்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இன்று கிறிஸ் ஜோர்டன் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் யாருக்கு மாற்றம் என்பதை பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now