Advertisement

இணையத்தில் வைரலாகும் கோலியின் பள்ளி சுற்றறிக்கை !

விராட் கோலி பள்ளியில் படித்தபோது அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் அனுப்பிய சுற்றறிக்கை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 25, 2021 • 13:41 PM
Circular from Virat Kohli’s school goes viral
Circular from Virat Kohli’s school goes viral (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, உலக கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவர் தலைமையிலான இந்திய அணி, சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடர் மற்றும் இங்கிலாந்து தொடரில் வென்று கோப்பையை கைப்பற்றியது. அதேபோல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கேப்டனாக இருந்து விராட் கோலி வழி நடத்தி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில், இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று கோலி தலைமையிலான பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

Trending


இந்த நிலையில், விராட் கோலி 10ஆம் வகுப்பு படிக்கும்போது 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான டெல்லி அணியில் தேர்வாகியுள்ளார். மேலும் அந்த அணிக்கு கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பாராட்டும் விதமாக அவர் படித்த பள்ளியில் இருந்து விராட் கோலியின் பெற்றோருக்கு வாழ்த்து சுற்றறிக்கை (Circular) அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement