
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் அபிஷேக் போரல் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக தொடங்கிய ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் கருண் நாயர் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதனால் அந்த அணி 34 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதிலும் குறிப்பாக இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அதன்படி இன்னிங்ஸின் 4ஆவது ஓவரை சந்தீப் சர்மா வீசிய நிலையில், அந்த ஓவரைன் முதல் பந்தை எதிர்கொண்ட அபிஷேக் போரல் முயன்றார், ஆனால் பந்து அவரது பேடைத் தாக்கி பாயிண்டை நோக்கிச் சென்றது. இதனால் கருண் நாயர் உடனடியாக ஒரு சிங்கிள் எடுக்கும் முயற்சியில் ஓடிய நிலையில், போரெல் பாதி வழியில் திருப்பி அனுப்பினார்.