
commendation ceremony for CSK on november 20 in chennai (Image Source: Google)
கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 14ஆவது சீசனில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்ச மு.க.ஸ்டாலின், இந்த வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருக்கிறது மகேந்திர சிங் தோனி என டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையே சென்னை வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்த அணியின் நிர்வாகம் முடிவெடுத்த நிலையில், உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக சென்னை அணியின் கேப்டன் தோனி, சர்துல் தாகூர், ஜடேஜா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இருந்ததால் பாராட்டு விழாவிற்கான தேதி முடிவு செய்யப்படாமல் இருந்தது.