
Congrats to former WBBL player Ashleigh Barty on becoming 2021 Wimbledon champion (Image Source: Google)
டென்னிஸ் விளையாட்டின் மிகப்பெரிய தொடரனான விம்பிள்டன் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீராங்கனை ஆஷ்லே பார்டி - செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவாவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இப்போட்டியின் முடிவில் ஆஷ்லே பார்ட்டி 6-3, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் கரோலினா பிலிஸ்கோவாவை வீழ்த்தி, விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.
முன்னதாக இவர் ஆஸ்திரேலியவின் உள்ளூர் டி20 லீக்க்கான மகளிர் பிக் பேஷ் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.