Advertisement
Advertisement
Advertisement

மகளிர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி; இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 13, 2022 • 16:36 PM
Congratulations Sri Lanka for reaching in Asia cup final 2022
Congratulations Sri Lanka for reaching in Asia cup final 2022 (Image Source: Google)
Advertisement

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் எட்டாவது சீசன் வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதன் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து அணிகள் முன்னேறின.

அதன்படி இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Trending


இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. 

அதன்படி விளையாடிய அந்த அணியில் கேப்டன் சமாரி அத்தபத்து 10 ரன்களிலும், அனுஷ்கா சஞ்சீவினி 26 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய மாதவி அதிரடியாக விளையாடி 35 ரன்களைச் சேர்த்தார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் நஷ்ரா சந்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை துரத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் முனீபா அலி 18 ரன்களிலும், சித்ரா அமீன் 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஒமைமா சொஹைல் 10, நிதா தார் 26 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதேசமயம் மறுமுனையில் அரைசதம அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பிஸ்மா மரூஃப் 42 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் மகளிர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதன்மூலம் இலங்கை மகளிர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன், மகளிர் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement