
சமீபகாலங்களில் டி20 கிரிக்கெட் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் பெரும் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்களும் உலகளவில் நடைபெறும் டி20 பிரான்சைஸ் கிரிக்கெட் தொடர்களில் விளையாட அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. முன்பெல்லாம் வீரர்கள் தங்களுக்கு எந்தவொரு சர்வதேச போட்டிகளும் இல்லாத சமயத்தில் தான் இதுபோன்ற டி20 பிரான்சைஸ் லீக் தொடரில் விளையாடி வந்தனர்.
ஆனால் சமீப காலங்களில் பிரான்சைஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் அதிக பணம் ஈட்டமுடியும் என்ற காரணத்தால் பெரும்பாலான வீரர்கள் தங்கள் சொந்த நாட்டிற்காக விளையாடாமல் லீக் போட்டிகளில் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்கான சரியான உதாரணமாக கிரிக்கெட்டின் ஆரம்ப காலத்தில் உலக ஜாம்பவானாக போற்றப்பட்ட வெஸ்ட் இண்டீஸை நம்பால் கூறமுடியும்.
ஆரம்ப காலங்களில் உலக கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்ததுடன் அடுத்தடுத்து இரண்டு முறை ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியால், தற்சமயம் உலகக்கோப்பை தொடரில் விளையாடகூட தகுதிப்பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணம் அணியி நட்சத்திர வீரர்கள் தங்கள் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் டி20 லீக் போட்டிகளில் விளையாடுவது தான் காரணம்.