-mdl.jpg)
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியின் இறுதிக்கட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்ஸர் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முதல் ஒருநாள் போட்டியின் போது பெரிய இலக்கினை சேசிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி சிறிய இடைவெளியில் போட்டியை தோற்று இருந்தது. அதனை தொடர்ந்து நேற்றைய போட்டியிலும் பெரிய ரன் குவிப்பில் ஈடுபட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியானது இறுதிவரை போராடி கடைசியில் தோல்வி அடைந்தது அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கும்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டிஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான், “நிச்சயமாக இந்த போட்டியில் தோற்றது வருத்தமாக தான் உள்ளது. கடைசி இரண்டு ஓவர்களில் நாங்கள் மிகவும் பதட்டம் அடைந்து விட்டோம். இந்திய அணி வீரர்கள் கடைசி 6 ஓவர்களில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். அந்த ஆறு ஓவர்களில் தான் நாங்கள் போட்டியை அவர்களிடம் தோற்றோம். ஸ்பின்னர்கள் வீசும் போது எளிதாக அடிக்க முடிகிறது என்பதனால் நாங்கள் எங்களது திட்டத்தை மாற்றி மாற்றி செயல்படுத்தினோம்.