
ஐபிஎல் என்றழைக்கப்பட்டும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழாவின் 17ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கிவிட்டன. அதற்கேற்றவகையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் ஐபிஎல் தொடரின் முதல் சீசனிலேயே கோப்பையை வென்று சாதித்துக்காட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தற்போது அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருவதுடன் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களினால் அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். இதனால் அந்த அணி தென் ஆப்பிரிக்காவின் கேஷவ் மகாராஜை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஏன் விலகினேன் என்பதற்கான காரணத்தை ஆடம் ஸாம்பா விளக்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நான் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடததற்கு பல காரணங்கள் உள்ளன. அதேசமயம் நடப்பாண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. அதுமட்டுமின்றி நான் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் சரியான ஃபார்மில் இல்லை என்பதே முக்கிய காரணம் என நினைக்கிறேன்.