ஐபிஎல் 2022: தோல்வி குறித்து வேதனை தெரிவித்த ரிஷப் பந்த்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 27ஆவது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
Trending
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. அதன்பின் இலக்கை துரத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.
இந்தநிலையில், பெங்களூர் அணியுடனான தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட், முஸ்தபிசுர் ரஹ்மான் ஒரே ஓவரில் 28 ரன்கள் விட்டுகொடுத்தது போட்டியில் பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரிஷப் பந்த் பேசுகையில், “டேவிட் வார்னர் மிக சிறப்பான ஆட்டத்தை எங்களுக்கு வெற்றியின் நம்பிக்கையை கொடுத்தார். மிட்செல் மார்ஸை குறை சொல்ல விரும்பவில்லை, இந்த தொடரில் அவருக்கு இது தான் முதல் போட்டி. ஆனால் மிடில் ஆர்டரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.
முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய ஒரே ஓவரில் தினேஷ் கார்த்திக் 28 ரன்கள் குவித்தது போட்டியில் பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய அந்த ஒரு ஓவருக்கு முன்பு வரை பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம், ஆனால் தினேஷ் கார்த்திக் வெறும் ஒரு ஓவரில் போட்டியை மாற்றிவிட்டார். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு நிச்சயமாக அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now