
டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ், 25 பந்துகளில் 61 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் ஒரு கட்டத்தில் தடுமாறிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. நடப்பாண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை சூரியகுமார் யாதவ் பெற்றார்.
சூர்யகுமார் யாதவ் , ஜிம்பாப்வே வீரர்கள் வீசிய யாக்கர் லென்த் பந்தை கூட அபாரமாக சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற பெயரை மீண்டும் இன்று நிலை நிறுத்தினார் சூரியகுமார் யாதவ். இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரைக் எர்வீன், சூர்யக்குமார் யாதவை வெகுவாக பாராட்டினார்.
இதுகுறித்து பேசிய அவர், “எங்களுடைய திட்டத்தை நாங்கள் மாற்றி இருக்க வேண்டும். சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தில் இறுதிக்கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். ரீச்சி வீசிய ஓயிடு யாக்கர்களை சூர்யகுமார் யாதவ் ஆடிய விதம் அபாரமாக இருந்தது. நாங்கள் பந்தின் வேகத்தை குறைத்து வீசியிருக்க வேண்டும். எனினும் அனைத்து சிறப்புகளும் சூர்ய குமாருக்கே சேரும்.