Advertisement

ஆட்டத்தை முன்கூட்டியே முடிக்க தவறிவிட்டோம் - சஞ்சு சாம்சன்

நான்கள் தொடக்கத்திலேயே சில கேட்ச்சுகளை பிடித்திருந்தால் ஆட்டத்தை முன்கூட்டியே முடித்திருப்போம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Could've Won The Game Early If There Weren't Drop Catches, Says RR Captain Samson
Could've Won The Game Early If There Weren't Drop Catches, Says RR Captain Samson (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 22, 2021 • 12:30 PM

துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 32 ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 185 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்து அருமையான துவக்கத்தை தந்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 22, 2021 • 12:30 PM

ராகுல் 49 ரன்களையும், அகர்வால் 67 ரன்களையும் குவித்து அசத்தினர். அதன்பின்னர் மார்க்ரம் 26 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 32 ரன்களையும் குவித்தனர். ஒருகட்டத்தில் எளிதாக வெற்றி பெறவேண்டிய பஞ்சாப் அணி இறுதி இரண்டு ஓவர்களில் 8 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் 5 ரன்களை மட்டுமே அடித்து 2 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. கடைசி ஓவரை அற்புதமாக வீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான கார்த்திக் தியாகி நான்கு ரன்கள் அடிக்க வேண்டிய வேளையில் ஒரே ரன்னை மட்டும் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ராஜஸ்தான் அணிக்கு அசத்தலான வெற்றியை தேடி தந்தார்.

Trending

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சஞ்சு சாம்சன் “நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்று இறுதிவரை நினைத்துக் கொண்டே இருந்தோம். அதனால் தான் நான் இறுதி வரை ரஹ்மான் மற்றும் தியாகி ஆகியோருக்கு ஓவரை நிறுத்தி வைத்திருந்தேன். கிரிக்கெட் எப்போதுமே ஒரு விளையாட்டான போட்டி தான். இறுதிவரை நாங்கள் போராட்டத்தையும் நம்பிக்கையையும் வைத்திருந்தோம்.

எப்போதுமே நான் எனது அணியின் பந்து வீச்சாளர்கள் மீது அபரிதமான நம்பிக்கை வைத்து இருப்பேன். நிச்சயம் இந்த போட்டியிலும் இறுதிவரை நாங்கள் போராட வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி கடைசி 2 ஓவர்கள் இன்று சிறப்பாக அமைந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்த ஸ்கோர் இந்த மைதானத்திற்கு போதுமான ஒன்று தான்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

நாங்கள் முன்கூட்டியே சில கேட்ச்களை தவறவிடாமல் பிடித்திருந்தால் போட்டி இன்னும் முன்னதாக முடிந்திருக்கும். இந்த போட்டியின் வெற்றிக்கு எங்களது பந்துவீச்சாளர்களே காரணம்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement