
CPL 2021: All-round Reifer earns first points for Barbados Royals (Image Source: Google)
சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் பார்போடாஸ் ராயல்ஸ் - ஜமைக்கா தலாவாஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பார்போடாஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் கிளென் பிலீப்ஸ், ரெய்ஃபெர் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக கிளென் பிலீப்ஸ் 56 ரன்களுடனும், ரெய்ஃபெர் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தது. தலாவாஸ் அணி தரப்பில் பெருமாள் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.