
CPL 2021: Guyana Amazon Warriors apply the choke to seal tight win (Image Source: Google)
சிபிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கயானா அமேசன் வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி 17 ரன்களுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராண்டன் கிங் அரைசதமடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிராண்டன் கிங் 77 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்தது. கிங்ஸ் அணி தரப்பில் ஜேவர் டைலர், வஹாப் ரியாஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.