
CPL 2021: Lewis, Thomas fifties put Patriots on top (Image Source: Google)
நடப்பாண்டு சிபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சந்தர்பால் ஹெம்ராஜ் 39 ரன்களையும், முகமது ஹபீஸ் 38 ரன்களையும் சேர்த்தனர். பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் டொமினிக் டார்க்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணிக்கு டேவன் தாமஸ் - எவின் லூயிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினார்.