
CPL 2021: Pooran 75 dents Tallawahs' qualification hopes (Image Source: Google)
சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியஸ் - ஜமைக்கா தலாவாஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வாரியஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதில் கேப்டன் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வாரியர்ஸ் அணி 169 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பூரன் 75 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸ்ஸல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.