
CPL 2021: Royals keep semifinal hopes alive with clinical win (Image Source: Google)
சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் பார்போடாஸ் ராயல்ஸ் - கயானா ஆமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் டாஸ் வென்ற வாரியர்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் - சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. அதன்பின் இறுதியில் கிளென் பிலீப்ஸ் தனது பங்கிற்கு 44 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக கிளென் பிலீப்ஸ் 44, சார்லஸ் 40 ரன்களை எடுத்தனர்.