CPL 2021: Rutherford fifty helps Patriots continue winning run (Image Source: Google)
சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் ஜமைக்கா தலாவாஸ் - செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்வுசெய்தது.
இதையடுத்து களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தாலும், தொடர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜமைக்கா தலாவாஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைச் சேர்த்தது. பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் டுவைன் பிராவோ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது.