
CPL 2021: Rutherford helps St Kitts maintain unbeaten start (Image Source: Google)
சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் - செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மொதின. இதில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வாரியர்ஸ் அணியில் முகமது ஹபீஸ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். பின் அவருடன் இணைந்த ஹெட்மையரும் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இதனால் 20 ஓவர்களில் வாரியர்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக முகமது ஹபீஸ் 70 ரன்களையும், ஹெட்மையர் 52 ரன்களையும் சேர்த்தனர்.