
CPL 2021: Saint Lucia Kings beat St Kitts &Nevis Patriots by 100 runs (Image Source: Google)
சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, செயிண்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது.
அதன்படி களமிறங்கிய செயிண்ட் லூசியா கிங்ஸ் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், ரோஸ்டன் சேஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்தது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 120 ரன்களையும், ரோஸ்டன் சேஸ் 64 ரன்களையும் சேர்த்தனர்.