
CPL 2021: Saint Lucia Kings won by 51 runs (Image Source: Google)
சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வாரியர்ஸ் முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய செயிண்ட் லூசியா கிங்ஸ் ரோஸ்டன் சேஸின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 85 ரன்களைச் சேர்த்து அசத்தினார். வாரியர்ஸ் அணி தரப்பில் செஃபெர்ட், ஓடின் ஸ்மித் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.