
CPL 2021: Shepherd stars in Warriors' Super Over win against Knight Riders (Image Source: Google)
சிபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக காலின் முன்ரோ 32 ரன்களைச் சேர்த்தார். வாரியர்ஸ் அணி தரப்பில் செஃபெர்ட், ஹபீஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கிய வாரியர்ஸ் அணியும் ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ஹெட்மையர் - பூரன் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.