
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் மற்றும் பார்போடாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்போடாஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நைட்ரைடர்ஸ் அணிக்கு மார்ட்டின் கப்தில் - மார்க் தயால் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் தயால் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 4 சிக்சர்கள் என 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த மார்ட்டின் கப்தில் 58 பந்துகளில் ஒரு பவுண்டரி, 9 சிக்சர்கள் என தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களைச் சேர்த்தது.