-mdl.jpg)
வெஸ்ட் இண்டீஸ்வில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வாரியர்ஸ் அணிக்கு சைம் அயுப் - ஓடியன் ஸ்மித் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஓடியன் ஸ்மிட் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷாய் ஹோப்பும் 2 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சைம் அயுப் 49 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய அஸாம் கான் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடி 36 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களும் ஓரளவு ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வாரியர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் டிரென்ஸ் ஹிண்ட்ஸ், வக்கர் சலாம்கெல் தலா 2 விக்கேட்டுகளைக் கைப்பற்றினர்.