
வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்போடாஸ் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. குயின்ஸ் பார்க் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பார்போடாஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டிரின்ப்கோ அணிக்கு தொடக்க வீரர் தேயல் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் அடுத்து வந்த நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரான் அதிரடியாக விளையாடி விரைவாக சேர்த்தார்.
இருப்பினும் மறுபுறம் சற்று தடுமாறிய மற்றொரு நட்சத்திர வீரர் மார்ட்டின் கப்தில் 5 பவுண்டரியுடன் 37 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த கேப்டன் பொல்லார்ட் அவசரப்பட்டு 2 ரன்களில் ரன் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த லோர்கன் டக்கரும் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரான் அரை சதமடித்தார்.
அவரது அதிரடியால் ஒவ்வொருவருக்கும் 10 ரன்களுக்கு மேல் குவித்த டிரின்பாகோ அணிக்கு முக்கிய நேரத்தில் வந்த ஆண்ட்ரே ரஸல் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 5ஆவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 1 பவுண்டரி 4 சிக்சருடன் 39 ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அடம் பிடித்த நிக்கோலஸ் பூரான், கைல் மேயர்ஸ் வீசிய கடைசி ஓவரில் 86 ரன்களில் இருந்ததால் சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.