
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் சிபிஎல் 12ஆவது சீசனில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பேட்ரியாட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனையடுத்து களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணிக்கு எவின் லூயிஸ் - கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் எவின் லூயிஸ் 15 ரன்களில் நடையைக் கட்ட, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கைம் மேயர்ஸும் 17 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஃபிளெட்சருடன் இணைந்த ரைலீ ரூஸோவ் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்த அணியின் ஸ்கோரும் 150 ரன்களை எட்டியது. அதன்பின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களை சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடி ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 50 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரைலீ ரூஸோவ் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பேட்ரியாட்ஸ் அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.