
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கெபெர்ஹா உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டோனி டி ஸோர்ஸி மற்றும் டேவிட் பெடிங்ஹாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டோனி டி ஸோர்ஸி 8 ரன்னிலும், டேவிட் பெடிங்ஹாம் 11 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டாம் அபெல் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஜோர்டன் ஹார்மன் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 53 ரன்கள் எடுத்த கையோடு ஹார்மென் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து கேப்டன் ஐடன் மார்க்ரம் 8 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்கள் மிடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களைச் சேர்த்தது. பார்ல் ராயல்ஸ் தரப்பில் கேப்டன் பிஜோர்ன் ஃபோர்டுன், மிட்செல் ஓவென் மற்றும் ஈஷான் மலிங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கேப்பிட்டல்ஸ் அணிக்கு லுஹான் ட்ரெ பிரிட்டோரியஸ் மற்றும் மிட்செல் ஓவன் இணை தொடக்கம் கொடுத்தனர்.