
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது. மேலும் இந்த இரு போட்டிகளிலும் இந்திய வீரர் ஷிவம் தூபே அரைசதம் அடித்ததுடன், பந்துவீச்சிலும் விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றியில் பங்காற்றியுள்ளார்.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய ஷிவம் தூபே, “இவ்வாறு சிறப்பாக செயல்படுவதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே அணி மற்றும் தோனி தான். என்னிடம் எப்போதுமே இது போல் அதிரடியாக ஆடக்கூடிய திறமை இருக்கிறது. ஆனால் என்னிடமிருந்து அதை வெளிக்கொண்டு வந்து என்னை சிறந்த வீரராக உருவாக்கியது சிஎஸ்கே வின் செயல் தான். கிரிக்கெட்டில் தேவைப்படக்கூடிய அனைத்தையும் எனக்கு சிஎஸ்கே தான் வழங்கியது.
அவர்கள் தான் எனக்கு நம்பிக்கையை கொடுத்தார்கள். இதோ பார் ஷிவம் துபே, உன்னால் ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடிக்க முடியும். கவலைப்படாதே உன் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார்கள். தோனி மட்டுமல்லாமல் மைக்கேல் ஹசி, பிளமிங் போன்றோர் என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள்.