
Cricket Fraternity Lauds Bangladesh For Scripting History in New Zealand (Image Source: Google)
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் இது மிக முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பலமிக்க நியூசிலாந்து அணியை அதன் மண்ணில் இதுவரை டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் என எந்த வடிவ கிரிக்கெட்டிலும் வங்கதேசம் வென்றதே இல்லை. ஆனால் அது இன்று மாறியுள்ளது. இதே போல நியூசிலாந்துக்கு எதிராக வங்கதேசம் பெறும் முதல் டெஸ்ட் வெற்றியும் இதுவே ஆகும்.