
தற்பொழுது உலகத்தின் மிகச் சிறந்த மற்றும் நம்பர்1 டி20 தொடராக ஐபிஎல் டி20 தொடர் இருக்கிறது. இந்த ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமத்தை விற்றதன் மூலம் ஐபிஎல் தொடர் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. உலகளவில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட இரண்டாவது விளையாட்டு தொடராக ஐபிஎல் இருக்கிறது.
ஐபிஎல் தொடரை பொருத்தமட்டில் வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி உண்டு. அதே சமயத்தில் டி20 வடிவத்தில் வேறு எந்த நாட்டில் நடத்தப்படும் தொடர்களில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. அப்படி யாராவது பங்கேற்றால் அவர்களுக்கு இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு தரப்படாது என்கின்ற விதியை இந்திய கிரிக்கெட் வாரியம் பின்பற்றி வருகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த விதியால் இந்தியாவில் தயாராகும் வீரர்கள் பல்வேறு நாடுகளின் சூழல்களுக்கு பழகப் முடியாமல் போகிறது. இதுகுறித்து இந்தியாவிலிருந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்பொழுது இது சம்பந்தமாக பேசியுள்ள இந்திய அணியின் மூத்த முன்னாள் வீரர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.