
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என்று மொத்தமாக 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த உலகக் கோப்பை தொடரானது சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, அஹ்மதாபாத் என்று 10 மைதானங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக நடக்க இருந்த உலகக் கோப்பை தொடக்க விழாவானவது ஒருசில காரணங்களினால் ரத்து செய்யப்பட்டு, 10 அணிகளின் கேப்டன்களின் மீட்டிங் மட்டுமே நடத்தப்பட்டது. இந்த நிலையில், தான் உலகக் கோப்பை விழாவை, வரும் 14 ஆம் தேதி நடத்த இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் முறையாக நாளை அஹ்மதாபாத்தில் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு முன்னதாக உலகக் கோப்பை விழாவை பிரம்மாண்டமாக நடத்த பிசிசிஐ ஏற்பாடுகள் செய்துள்ளது. இதற்காக அஹ்மதாபாத் நரேந்திர மோடி மைதானமானது தயார் செய்யப்பட்டுள்ளது.