Advertisement

உலகக்கோப்பை 2023: இரண்டு முறை நழுவ விட்டதை பிடிக்குமா நியூசிலாந்து?

நடக்கவிருக்கும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்வுள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்..

Advertisement
உலகக்கோப்பை 2023: இரண்டு முறை நழுவ விட்டதை பிடிக்குமா நியூசிலாந்து?
உலகக்கோப்பை 2023: இரண்டு முறை நழுவ விட்டதை பிடிக்குமா நியூசிலாந்து? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 02, 2023 • 11:41 AM

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. தற்போது 10 அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 02, 2023 • 11:41 AM

இதில் பங்கேற்று விளையாடும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் கண்டுள்ளது. கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் பவுண்டரிகள் வித்தியாசத்தில் கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது நியூஸிலாந்து அணி. இதுவரை இந்த அணி உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது இல்லை. இதனால் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்கவுள்ளது.

Trending

நியூசிலாந்து அணியின் பலம் மற்றும் பலவீனங்கள்

இந்திய மண்ணில் சாதிப்பதற்கு வரும் நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2019 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்ற அவர் 2023 ஐபிஎல் தொடரில் காயத்தை சந்தித்ததால் விளையாட மாட்டார் என்ற செய்திகள் வெளியான போதிலும் வேகமாக குணமடைந்து கேப்டனாக களமிறங்க உள்ளார். அவருடன் ஐபிஎல் 2023 தொடரில் சிஎஸ்கே அணிக்காக 600க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து கோப்பையை வெல்ல உதவியை தொடக்க வீரர் டேவோன் கான்வே இந்திய சூழ்நிலைகளுக்கு நன்றாக பழகியுள்ளதால் எதிரணி பவுலர்களை வெளுப்பதற்கு தயாராக இருக்கிறார்.

அவருக்கு நிகரான ஜோடியாக அனுபவமிக்க டாம் லாதம் தயாராக இருக்கும் நிலையில் வில் எங், மார்க் சாப்மேன் ஆகியோர் பேட்டிங் துறையில் வெற்றிக்கு போராடும் திறமையும் தெம்பும் நிறைந்த வீரர்களாக இருக்கின்றனர். மேலும் மிடில் ஆர்டரில் கிளன் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடிய ஃபினிஷிங் செய்யக்கூடிய வீரராக சமீப காலங்களில் அசத்தி வரும் நிலையில் ஜிம்மி நீஷம், டெரில் மிட்சேல் ஆகியோர் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அசத்தும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக பலம் சேர்க்கிறார்கள்.

மேலும் சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் அசத்துவதற்கு இஷ் சோதி, ரச்சின் ரவீந்தரா, மிட்சேல் சாட்னர் ஆகியோர் ஏற்கனவே தங்களுடைய திறமைகளை நிரூபித்த தரமான ஸ்பின்னர்களாக தயாராக இருக்கிறார்கள். அதில் சாட்னர் டெயில் எண்டராக வந்து அதிரடியாக ரன்களை சேர்க்கும் திறமையை கொண்டுள்ளது நியூசிலாந்து அணியின் பேட்டிங் ஆழத்தை அதிகரிக்கிறது.

அதை விட டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக மத்திய ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய டிரெண்ட் போல்ட் நாட்டுக்காக உலகக்கோப்பையை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்தொடரில் விளையாடுவதற்காக தாமாக வந்துள்ளார். அவர் புதிய பந்தை ஸ்விங் செய்து எந்தளவுக்கு பவர்பிளே ஓவர்களில் பேட்ஸ்மேன்களை தெறிக்க விடுவார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அவருடன் அனுபவமிக்க டிம் சௌதீ, 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய லோக்கி ஃபெர்குசன் மற்றும் மாட் ஹென்றி ஆகியோர் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சு துறையை வலுப்படுத்துகின்றனர். அப்படி இந்த அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளனர். அதனால் இந்தியா உள்ளிட்ட அனைத்து எதிரணிகளுக்கும்  சவாலை கொடுத்து 2023 உலகக்கோப்பையை இம்முறை தவற விடாமல் தட்டி தூக்கும் திறன் நியூசிலாந்து அணியிடம் உள்ளதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நியூசிலாந்து அணியின் உலகக்கோப்பை பயணம்

  •      1975: அரையிறுதி சுற்று
  •      1979: அரையிறுதி சுற்று
  •      1983: குரூப் ஸ்டேஜ்
  •      1987: குரூப் ஸ்டேஜ்
  •      1992: அரையிறுதி சுற்று
  •      1996: காலிறுதி சுற்று
  •      1999: அரையிறுதி சுற்று
  •      2003: சூப்பர் சிக்ஸ்
  •      2007: அரையிறுதி சுற்று
  •      2011: அரையிறுதி சுற்று
  •      2015: இரண்டாம் இடம் 
  •      2019: இரண்டாம் இடம்

உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம் (துணை கேப்டன்), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லோக்கி ஃபெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, வில் யங்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement