
Crowd Capacity Increased To 80 Percent For England-Pakistan Edgbaston ODI (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக பாபர் அசாம் தலைமையிலான 24 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டு, இன்று தனி விமானம் மூலம் இங்கிலாந்து செல்லவுள்ளது.
இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவார கால தனிமைப்படுத்துதலுக்கு பிறகு பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதற்கிடையில் இங்கிலாந்தில் கரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், எட்ஜ்பாஸ்ட்னில் நடைபெறவுள்ள இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டியில் 80 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக வார்விக்ஷையர் கிரிக்கெட் கிளப் அறிக்கை வெளியிட்டுள்ளது.