தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் டூ பிளெசிஸ்?
டி20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளெஸ்சிஸை தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் சேர்க்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் வெள்ளைப் பந்துப் பயிற்சியாளராக ராப் வால்டர் நியமிக்கப்பட்டதையடுத்து டு பிளெசிஸை தென் ஆப்பிரிக்க அணியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் டு பிளெஸ்சிஸ் சேர்த்துக்கொள்ளப்படுவார் எனக் கூறப்பட்டது. எனினும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள டு பிளெசிஸ், இன்னும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக உள்ளார். 2021, 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் டு பிளெசிஸ் விளையாடாமல் போனாலும் உலகெங்கும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். கடைசியாக டெஸ்டில் விளையாடிய பிறகு இதுவரை டி20 லீக் போட்டிகளில் 90 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
Trending
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் இனாக் இதுபற்றி கூறுகையில், “உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு தேர்வுக்குழு, பயிற்சியாளர் ஆகியோரிடம் டு பிளெஸ்சிஸ் பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட விருப்பமாக உள்ளோம். நல்ல வழி கிடைக்கும் என நம்புகிறோம்.
ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆர்வமாக உள்ளோம். பயிற்சியாளர் ராப் வால்டர் இதுபோன்ற உரையாடலில் மிகவும் ஆர்வத்துடன் உள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி20க்கு என வீரர்களுக்குத் தனித்தனியாக ஒப்பந்தங்களை வழங்குவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now