
CSA to allow Indian players to leave tour midway if COVID situation worsens in South Africa (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
இதுவரை, தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. இதனால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது
ஓமைக்கரான் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால், இந்த தொடருக்கு பல முன்எச்சரிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியை நேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் பாதுகாப்புக்காக தீவிர பயோ பபுள் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.